ஆதார் கார்டு- பான் கார்டு இணைப்பு செய்தாச்சா.. மார்ச் 31-க்குள் கண்டிப்பா செய்திடுங்க..!

 இந்தியாவினை பொறுத்தவரையில் ஆதார் பான் என்பது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பான் எண் என்பது இல்லாவிட்டால் இன்றைய காலக்கட்டத்தில் நிதி ரீதியிலான எந்தவொரு சேவைகளையும் செய்ய முடியாது. ஆக இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களைத் தான் அரசு இணைக்க பல ஆண்டுகளாக கூறி வருகின்றது. இதற்கென ஏற்கனவே பல்வேறு முறை கால அவகாசம் கொடுத்த நிலையிலும், இதுவரையிலும் சிலரும் இணைக்கவில்லை.


இந்த நிலையில் தான் தற்போது ஆதார் பான் இணைப்புக்கான கால அவகாசம் மீண்டும் மார்ச் 31, 2023 வரையில் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதார் பான் இணைப்புக்கான கால அவகாசம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளத.



சேவைகள் தடைபடலாம்

ஒரு வேளை ஆதார் பான் எண் என்பதை சரியாக இணைக்காவிட்டால் ஏப்ரல் 1 முதல் உங்களது பான் எண் செயலற்று போகலாம். ஆக அதற்கு முன்பாக உங்களது ஆதார் பான் எண்ணை இணைத்துவிடுவது நல்லது. அப்படி இணைக்காவிடில் உங்களது பான் கார்டினை பண பரிவர்த்தனையில் பயன்படுத்த முடியாமல் போகலாம். வருமான வரி தாக்கல் செய்யாமுடியாமல் போகலாம்.



ரூ.1000 வரை கட்டணம்

ஆக அரசின் இந்த காலக்கெடுவுக்குள் ஆதார் பான் இணைப்பு செய்யப்படாவிட்டால், மார்ச் 31-க்கு பிறகு 1000 ரூபாய் வரையில் கட்டணம் விதிக்கப்படலாம். ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், மீண்டுமொரு முறை ஓமிக்ரான் காரணமாக அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அவகாசம் இருப்பது கடினம் எனலாம்.



எப்படி இணைக்கலாம்?

ஆதார் மற்றும் பான் எண்ணினை இணைக்க http://incometaxindiafiling.gov.in./ என்ற இணைய பக்கத்தில் சென்று இணைக்கலாம்.

இந்த இணைய பக்கத்திற்கு சென்று, வலைதளத்தின் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும்.

இதனையடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு அங்குள்ள கேப்ட்சா எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும். இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்ய வேண்டும். ஆக ஆன்லைனை பயன்படுத்தவர் எனில் எளிதாக இருந்த இடத்தில் இருந்தே இணைத்துக் கொள்ளலாம்.



SMS மூலம் இணைக்கலாம்

பான் எண்னை ஆதார் எண்ணுடன் மொபைல் எஸ்எம்எஸ் மூலம் கூட இணைக்கலாம்.

இதற்காக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம்.

மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

இதெல்லாம் என தெரியாது என கூறுபவர்கள் ஆதார் மையங்களிலும் சென்று இணைத்துக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

Maharashtra HSC Result 2025 Out..............................

GSEB HSC Result 2025 (OUT): Check Gujarat Board 12th Result @gseb.org

NEET UG 2025 Biology Answer Key................